25 அடி உயர வேலியை தாண்டி புலிகள் வசிப்பிடத்திற்குள் குதிக்க முயன்ற நபர்

மத்தியபிரதேசத்தில் உயிரியியல் பூங்காவில் வேலியை தாண்டி புலிகளின் வசிப்பிடத்திற்குள் குதிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
புலிகள் வசிப்பிடம்
புலிகள் வசிப்பிடம்
Published on

இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் கமலா நேரு உயிரியல் பூங்கா உள்ளது. அப்பூங்காவிற்கு நேற்று வந்த சுற்றுலாப்பயணிகளில் ஒருவரான விஜய் ஜாலா (வயது 43) திடீரென புலிகள் வசிப்பிடத்தின் வேலியின் மீது வேக வேகமாக ஏறினார். அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து விரைந்து வந்த பூங்கா ஊழியர்கள், உள்ளே குதிக்க முயன்ற விஜயை தடுத்து நிறுத்தி கீழே இறங்கச் செய்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கடன் தொல்லை அதிகமானதால் மன அழுத்தத்தில் இருந்த விஜய் தற்கொலை செய்யும் எண்ணத்தில் புலிகள் இருக்கும் இடத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார், என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com