ஒக்கி புயல் எச்சரிக்கை எதிரொலி: மும்பை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட ஒக்கி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக மும்பையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒக்கி புயல் எச்சரிக்கை எதிரொலி: மும்பை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Published on

மும்பை:

குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட ஒக்கி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக மும்பையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குமரிக் கடலில் கடந்த 30ம் தேதி உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டத்தையும், கேரள கடற்கரை பகுதியையும் புரட்டிப் போட்டு கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன்பின், தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவை கடந்து சென்றது. அது தொடர்ந்து வடக்கு-வட மேற்கு திசையில் குஜராத்தை நோக்கி மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது.

இதனால், இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி தெற்கு குஜராத்-வடக்கு மராட்டியம் இடையே உள்ள பகுதியில் சூரத் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், ஒக்கி புயல் குறித்த எச்சரிக்கையால் மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மராட்டிய மாநில கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே டுவிட்டரில், மராட்டிய மாநிலத்துக்கு ஒக்கி புயல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com