கொரோனாவால் தொழில் நஷ்டம்: மதுரை அச்சக அதிபர் கழுத்தை அறுத்து தற்கொலை

மதுரையில் தொழில் நஷ்டம் காரணமாக அச்சக அதிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

மதுரை:

மதுரை எஸ்.எஸ். காலனி மோதிலால் மெயின் ரோடு, யோகானந்த சாமி வடக்கு மடம் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 51). தொழில் அதிபர். இவர் அந்த பகுதியில் அச்சக நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இளங்கோவன் அச்சகத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் தொழில் நடத்த முடியாமல் கடந்த 50 நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.

இதற்கிடையே “ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம்” என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் மனவேதனை அடைந்த இளங்கோவன் நேற்று இரவு வீட்டில் கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com