கிரிக்கெட் மீது கறை படிய காரணமானதற்கு ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்- டேவிட் வார்னர்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது தவறை உணர்ந்து கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். #davidwarner #BallTampering
கிரிக்கெட் மீது கறை படிய காரணமானதற்கு ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்- டேவிட் வார்னர்
Published on

தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. மேலும், பந்தை சேதப்படுத்திய பான்கிராப்டுக்கு 9 மாதம் விளையாடவும் தடை விதித்துள்ளது. மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஐ.பி.எல். 2018 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தான் செய்த தவறை உணர்ந்த டேவிட் வார்னர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில், 'ஆஸ்திரேலியா மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் என்னை மன்னிக்க வேண்டும். நான் செய்த தவறு கிரிக்கெட் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தவறினால் சிறு வயதிலிருந்து நான் நேசித்த கிரிக்கெட் மீது பெரும் கறை படிந்துள்ளது. அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என வார்னர் குறிப்பிட்டிருந்தார். #davidwarner #BallTampering

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com