சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தி தேசிய அளவில் உண்ணாவிரதம் - காங்கிரஸ்

சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 9-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #BharatBandhSCST
சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தி தேசிய அளவில் உண்ணாவிரதம் - காங்கிரஸ்
Published on

புதுடெல்லி:

எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் சுப்ரீம் கோர்ட் சில திருத்தங்களை செய்து சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனால், வட மாநிலங்களில் தலித் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையேயான மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்து, தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த வலியுறுத்தி வரும் 9-ம் தேதி தேசிய அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #BharatBandhSCST #TamilNews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com