கொழும்பு டெஸ்ட்: 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 553/7; அஸ்வின், சஹா அரைசதம்

கொழும்பில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 553 ரன்கள் குவித்துள்ளது.
கொழும்பு டெஸ்ட்: 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 553/7; அஸ்வின், சஹா அரைசதம்
Published on

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பு சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் புஜாரா மற்றும் ரகானே ஆகியோரின் சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர்கள் தவான் 35 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 57 ரன்னிலும், கேப்டன் கோலி 13 ரன்னிலும் அவுட் ஆனார்கள். புஜாரா 128 ரன்னுடனும், ரகானே 103 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


சகா பந்தை ஸ்வீப் செய்யும் காட்சி

இன்று 2-ம் நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் ஆட்டத்தை தொடங்கினார்கள். 92-வது ஓவரில் இந்தியா 350 ரன்னை தொட்டது. அதே ஓவரில் புஜாரா ஆட்டம் இழந்தார். கருணாரத்னே வீசிய அந்த ஓவரில் புஜாராவுக்கு எல்.பி.டபிள்யூ. ‘அவுட்’ கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார்.


எல்.பி.டபிள்யூ. ஆகிய புஜாரா

இதையடுத்து இலங்கை ‘டி.ஆர்.ஸ்’ முறையை பயன்படுத்தியது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. பந்து ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் ‘அவுட்’ கொடுக்கப்பட்டது. புஜாரா 232 பந்தில் 133 ரன் எடுத்தார். ரகானே- புஜாரா ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 217 ரன் சேர்த்தது.

அடுத்து ரகானே உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியாவின் ஸ்கோர் 413 ரன்னாக இருக்கும்போது ரகானே 132 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அதன்பின் வந்த அஸ்வின் உடன் சகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு  5 விக்கெட் இழப்பிற்கு 442 ரன்கள் எடுத்திருந்தது. அஸ்வின் 47 ரன்னுடனும், சகா 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


அரைசதம் அடித்த அஸ்வின் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சி

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் 121.4 ஓவரில் இந்தியா 450 ரன்னைத் தொட்டது. அஸ்வின் 91 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அஸ்வின் 54 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து சகா உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். பாண்டியா 20 பந்தில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து சகா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். சஹா சிறப்பாக விளையாடி 113 பந்தில் அரைசதம் அடித்தார். இதற்கிடையே இந்தியா 134.3 ஓவரில் 500 ரன்னைத் தொட்டது. முதலில் நிதானமாக விளையாடிய ஜடேஜா, பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


அஸ்வின் போல்டாகிய காட்சி

149-வது ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 550 ரன்னைக் கடந்தது. 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 553 ரன்கள் எடுத்துள்ளது. சகா 59 ரன்னுடனும், ஜடேஜா 37 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com