

சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் டி. நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசெல்வி, தென்காசி களப்பாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், திண்டுக்கல் சித்தரரேவு கிராமத்தைச் சேர்ந்த காட்டுராணி, தஞ்சாவூர் கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி, ராணிப்பேட்டை தருமநீதி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன்.
விழுப்புரம் திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, சேலம் காட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த குமார், நீலகிரி தேவாலா கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
மதுரை சோலைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஜெயா, புதுக்கோட்டை குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி, புதுக்கோட்டை கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அலிஷியாம், கிருஷ்ணகிரி போட்டுக்குழி கிராமத்தைச் சேர்ந்த வில்லாளி, கோயம்புத்தூர் சிக்கதாசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் ஆகியோரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையம் காரமடை கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு என்கிற முருகவேல், கடலூர் மாவட்டம், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், விழுப்புரம் தி. பாஞ்சாலம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோ ரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
திண்டுக்கல் பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த வர்ஷா பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.