

சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச்செம்மல் என்ற விருது ஏற்படுத்தப்பட்டு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு வழங்கப்படும் என ஜெயலலிதாவால் 25.7.2014 அன்று சட்டப்பேரவையில் விதி எண்.110-ன்கீழ் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2016, 2017 ஆகிய ஆண்டுகளுக்கு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 64 பேரை தமிழ்ச் செம்மல் விருதுபெற தேர்வு செய்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை இவ்விருதுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
தமிழ்ச்செம்மல் விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews