செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Published on

பூந்தமல்லி:

குன்றத்தூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பிரகலாதன் (வயது16). குன்றத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 13-ந்தேதி பள்ளிக்கு சென்ற பிரகலாதன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவனை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் சிறுகளத்தூர் பகுதியில் மதகு அருகே தண்ணீரில் சிறுவன் ஒருவன் பிணமாக மிதந்தான்.

போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றினர். விசாரணையில் அவன் மாயமான மாணவர் பிரகலாதன் என்பது தெரிந்தது.

பிரகலாதன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் செம்பரம்பாக்கம் ஏயில் குளித்துள்ளான். அப்போது ஆழமான பகுதியில் சென்றதால் தண்ணீரில் மூழ்கி விட்டான். ஆனால் பயந்து போன சக மாணவர்கள் யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்கு சென்று உள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com