

சேலம்:
மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் இன்று சேலம் இரும்பாலையை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மத்திய அரசின் கொள்கையே தனியார்மயத்தை ஊக்குவிப்பதுதான். சேலம் இரும்பாலையை தனியர்மயமாக்குவதை தடுத்து நிறுத்தவேண்டும். தனியார்மயமாக்குவதை தடுப்பதற்கு மாநில அரசு மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை. தொழிற்சாலையை தனியார்மயமாக்கினால் இடஒதுக்கீடு பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews