சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

சிரியா நாட்டு இட்லிப் மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி
Published on

பெய்ரூட்:

சிரியா நாட்டின்  இட்லிப் மாகாணத்தில் உள்ள அல்-டனா நகரின் மார்க்கெட் பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிந்தனர். அப்போது மார்க்கெட் அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று, இறந்தவர்களின் பிரேதங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்க்காக அனுமதித்துள்ளனர்.

முன்னதாக, இதே நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com