VinFast | இலவச சார்ஜிங் வசதியை நீட்டித்த செய்த வின்பாஸ்ட் நிறுவனம்

தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.
மின்சார கார்
மின்சார கார்
Published on

உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் 16,000 கோடி ரூபாய் மதிப்பில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.

அதன்படி, தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் மின்சார கார்கள், மின்சார இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்திய மின்சார வாகன சந்தையில் வின்பாஸ்ட் நிறுவனம் தற்போது கால் பதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது நிறுவனத்தின் சார்ஜிங் நிலையங்களில் கார்கள், இரு சக்கர வாகனங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், வின்பாஸ்ட் நிறுவனம் தனது இலவச சார்ஜிங் திட்டத்தை 2029, மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்துள்ளது. இந்தச் சலுகை பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா நாடுகளிலும் செல்லும் என அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com