GOLD PRICE TODAY | சென்னையில் இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY | சென்னையில் இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
Published on

தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து தொடர்ந்து விலை சரிந்து வருவதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,14,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை காலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில், மாலையில் ரூ.3200 குறைந்து ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, இன்று காலை கிராமுக்கு ரூ.270 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போர் சூழல் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயர்ந்து வந்த தங்கம் விலை சில நாட்களாக அதிரடியாக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:

19-03-2026- ஒரு பவன் (22 கேரட்) ரூ.ரூ.1,14,400

18-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,560

17-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

16-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,680

15-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,080

14-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,080

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:

18-03-2026- ஒரு கிராம் ரூ.275

17-03-2026- ஒரு கிராம் ரூ.280

16-03-2026- ஒரு கிராம் ரூ.276

15-03-2026- ஒரு கிராம் ரூ.280

14-03-2026- ஒரு கிராம் ரூ.280

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com