video | இன்றைய சூழலில் தங்கம் வாங்கலாமா வேண்டாமா? - பங்குச்சந்தை நிபுணர் சேதுராமன் சொல்வது என்ன?

சென்னையில் 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,31,000-ஆக உள்ளது.
Gold Price Drop
Published on

மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தற்போது தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்து பங்குச்சத்தை நிபுணர் சேதுராமன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை காலையில் இருந்தே வீழ்ச்சியை தழுவியுள்ளது. அமெரிக்க ஈரான் போர் பிரச்சனை காரணமாக சந்தை விலை கணிக்கமுடியாத வகையில் உள்ளது.

கச்சா எண்ணெயின் விலை மறுபடியும் உயர ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, தங்கத்தில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்பொழுது MCX-இல்(மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில்) தங்கத்தின் விலை 0.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,31,000-ஆக உள்ளது. அமெரிக்க டாலர் இண்டெக்ஸ்(குறியீடு) தற்போது அதிகரித்த நிலையில் உள்ளது.

தங்கத்தின் மற்றொரு வீழ்ச்சிக்கு அமெரிக்காவின் ஃபெட் ரேட் காரணமாக பார்க்கப்படுகிறது. தங்கத்தை பொறுத்தவரையிலும், அதன்மீது ஒரு தாக்கம் சந்தையில் இருந்து வருகிறது. அதுபோல மேற்கத்திய நாடுகளில் உள்ள எக்ஸ்சேன்ஞ் டிரேடட் ஃபண்ட்ஸ் மூலம் மக்கள் லாபம் அடைந்து வருகிறார்கள்.

இந்த விதமான புதிய பிரச்சனைகள் அடிக்கடி தொடர்வதால், தங்கம் மீதான மதிப்பு குறையும். அதனால் தான் தங்கத்தின் விலையும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

மேற்காசியாவில் சமரச ஒப்பந்தம் கையெழுத்தாகி எண்ணெயின் விலை குறைந்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான தற்காலிக வீழ்ச்சி படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக ஃபெட் ரேட் (ஃபெடரல் வங்கியின்) வட்டி உயர்வு குறித்த தாக்கத்தின் காரணமாக தங்கத்தின் விலை சரிந்துள்ளது. எண்ணெய் விலை உயர்வு மற்றும் வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால், தங்கத்தை வருங்கால சேமிப்பாக வைத்திருந்தவர்கள், தற்பொழுது தங்கத்தில் இருந்து வெளியே வர ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக தற்பொழுது தங்கம் வாங்குவதை தள்ளிவைப்பது நல்லது. இன்னும் சில நாட்கள் கழித்து ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டால், அதுகுறித்து முடிவு எடுக்கலாம்.

இனிமேல் தங்கத்தின் மீது 30 முதல் 40 சதவீதம் அளவில் மிகப்பெரிய ஏற்றத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com