நாமக்கல்லில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

நாமக்கல்:

பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் திற்கு மாநில தொழிற்சங்க பேரவை துணை தலைவர் விஜய் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கே.விஜயன், அவைத்தலைவர்கள் சீனிவாசன், முத்துசாமி மற்றும் மாவட்ட பொருளாளர்கள் சத்தியா, ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி செல்வி, புஷ்பா, சேந்தை குணா, விஜய்கமல், ராஜேஸ் கண்ணா, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி, சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநில பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தே.மு.தி.க. வினர் கோ‌ஷங்களை எழுப்பினர். மேலும் பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அதேபோல் பஸ் கட்டணத்தை தற்போது குறைத்திருப்பது பெயரளவிலான நடவடிக்கை என்று அவர்கள் கூறினர்.

முடிவில் நாமக்கல் ஒன்றிய கழக செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com