உ.பி.யில் நீல நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாறிய அம்பேத்கர் சிலை

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் படாவுன் பகுதியில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யில் நீல நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாறிய அம்பேத்கர் சிலை
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் படாவுன் நகரத்தில் இருந்த அம்பேத்கர் சிலை சில நாட்களுக்கு முன்னதாக மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதேபோல, அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், படாவுன் நகரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. முன்னர் நீல நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு தற்போது காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதும் முதல்வர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவகங்கள் காவி நிறத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது. #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com