

டி.எஸ்.கே. பென்லி நிறுவனம் ABS வசதி கொண்ட TNT 300 மாடல் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் பென்லி் நிறுவனம் ABS வசதி கொண்ட 302R மாடலினை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
புதிய TNT 300 மாடல் பென்லி நிறுவனத்தின் ABS வசதி கொண்ட மூன்றாவது மாடலாக அமைந்துள்ளது. ஏற்கனவே பென்லி அறிமுகம் செய்த TNT 600i மற்றும் 302R மாடல்களில் ABS வசதி வழங்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு விற்பனையாளர்களும் TNT 300 ABS மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளன.
வாடிக்கையாளர்கள் ரூ.25,000 செலுத்தி பென்லி TNT 300 மாடலை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்த சில தினங்களில் விநியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ABS வசதி கொண்ட பென்லி TNT 300 விலை ரூ.3.29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பென்லி TNT 300 மாடலில் 300சிசி லிக்விட் கூல்டு ட்வின்-சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 37bhp மற்றும் 26.5Nm டார்கியூ மர்ரும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதே இன்ஜின் 302R மாடலிலும் வழங்கப்பட்டது. 300சிசி நேக்டு மோட்டார்சைக்கிளில் அப்சைடு டவுன் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
முன்பக்கம் டூயல்-டிஸ்க் மற்றும் பின்புறம் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. புதிய பென்லி TNT 300 மாடல் எடை 196 கிலோ மற்றும் 16-லிட்டர் ஃபியூயல் டேன்க் கொண்டுள்ளது. இதன் எக்சாஸ்ட் மற்றும் எடை வாகனத்தை சீராக கட்டுப்படுத்த வழி செய்கிறது. புதிய TNT 300 பச்சை, வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு என நான்கு நிறங்களில் கிடைக்கின்றது.
சமீபத்திய வெளியீட்டைத் தொடர்ந்து டி.எஸ்.கே. பென்லி நிறுவனம் லியோன்சினோ ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளை நவம்பர் 2017-இல் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் TRK 502 அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடலினை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.