சென்னையில் சாலையோர குழந்தையை கடத்த முயன்றவருக்கு அடி உதை

சென்னை மந்தைவெளியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை கடத்த முயன்றவரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். #ChildTrafficking #Chennai
சென்னையில் சாலையோர குழந்தையை கடத்த முயன்றவருக்கு அடி உதை
Published on

சென்னை:

சென்னை மந்தைவெளியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை கடத்த முயன்றவரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

சென்னை மந்தைவெளியில் சாலையோரம் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை இன்று விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த மர்மநபர் ஒருவர் அந்த குழந்தையை தூக்கி செல்ல முயன்றபோது அருகில் இருந்த சிறுவன் கூச்சலிட்டதால் பொதுமக்கள் அந்நபரை பிடித்து, தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

சமீப காலமாக குழந்தை கடத்தல் சம்பவங்களும், கடத்தப்பட்டதாக வதந்திகளும் படுவேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த சம்பவம் சென்னை வாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. #ChildTrafficking #Chennai

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com