ஆன்மீக அரசியலில் ரஜினி வெற்றி பெறுவார்- அர்ஜூன் சம்பத் பேட்டி

ஆன்மீக அரசியலில் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். #arjunsampath #rajinikanth #spiritualpolitics
ஆன்மீக அரசியலில் ரஜினி வெற்றி பெறுவார்- அர்ஜூன் சம்பத் பேட்டி
Published on

திருப்பூர்:

இந்து மக்கள் கட்சியின் இணையதள ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தாமதம் செய்வது கோர்ட்டு அவமதிப்பாகும். மத்திய அரசுக்கு எதிராகவும், கர்நாடக முதல்வர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர வேண்டும். நியூட்ரினோ திட்டம் அப்துல் கலாம் ஆதரித்த திட்டம்.

ஆனால் அவர் இத் திட்டத்தை எதிர்த்தார் என்று மு.க. ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார்.

ரஜினிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம். 234 தொகுதிகளிலும் அவரை ஆதரிப்போம். ஆன்மீக அரசியலில் ரஜினி வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.#tamilnews #arjunsampath #rajinikanth #spiritualpolitics

X

Maalai Malar
www.maalaimalar.com