விஜயவாடா தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்தினற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம்: மோடி, அமித் ஷா, ஜெகன் மோகன் இரங்கல்

கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினற்கு மோடி, அமித் ஷா, ஜெகன் மோகன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஓட்டலில் தீ விபத்து
ஓட்டலில் தீ விபத்து
Published on

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொகுசு ஓட்டல் ஒன்று கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. 5 மாடி கொண்ட அந்த சொகுசு ஓட்டலில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஓட்டலில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com