மத்திய மந்திரி அனந்த குமாருக்கு மீண்டும் கொலை மிரட்டல்

கர்நாடகாவை சேர்ந்த மத்திய மந்திரி அனந்த குமாருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய மந்திரி அனந்த குமாருக்கு மீண்டும் கொலை மிரட்டல்
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனந்தகுமார் மத்திய மந்திரியாக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் வந்தது. மீண்டும் அவருக்கு தற்போது கொலை மிரட்டல் வந்துள்ளது.

ஒரு மர்ம நபர் மத்திய மந்திரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவரை கொன்று விடுவதாக மிரட்டினார். பின்னர் அவர் மத்திய மந்திரியின் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு இன்று அதிகாலை 2 மணிக்கு பேசி மீண்டும் கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து மந்திரியின் உதவியாளர் சிருசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 504 மற்றும் 507 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com