அம்பத்தூரில் ரவுடி கொலையில் 7 பேர் கைது

அம்பத்தூரில் ரவுடி கொலையில் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அம்பத்தூர்:

அம்பத்தூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அரிதாஸ் (42) ரவுடி. நேற்று முன்தினம் மதுபாரில் இருந்த அவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து உதவி கமி‌ஷனர் கண்ணன் உத்தரவின்படி அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நெப்போலியன், மணிவண்ணன், தர்‌ஷன், செந்தில், கரிகாலன், ரஞ்சித், தாஸ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். ரெயில் நிலையம் அருகே நடைபாதை கடைகளில் அரிதாஸ் மாமூல் வசூலித்து உள்ளார்.

மேலும் கோவில் நிர்வாகம் தொடர்பாகவும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில் அரிதாஸ் தீர்த்துக்கட்டப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com