மன்னார்குடியில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

மன்னார்குடியில் வேளாண் சட்ட நகலை காவிரி உரிமை மீட்பு குழுவினர் எரித்து பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் வேளாண் சட்ட நகலை தீயிட்டு கொளுத்திய போது எடுத்த படம்.
மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் வேளாண் சட்ட நகலை தீயிட்டு கொளுத்திய போது எடுத்த படம்.
Published on: 

மன்னார்குடி:

மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பெரியார் சிலை அருகே காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நடைபெற்றது. இதற்கு காவிரி உரிமை மீட்பு குழு தலைமை ஆலோசகர் டாக்டர் பாரதிசெல்வன் தலைமை தாங்கினார். இதில் திருவாரூர் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், திருவாரூர் நகர பொறுப்பாளர் செந்தில், இளைஞரணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மன்னார்குடி நகர இளைஞரணி செயலாளர் ஹரிகரன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் கோவலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து வேளாண் சட்ட நகலை காவிரி உரிமை மீட்பு குழுவினர் தீயிட்டு எரித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com