ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 50 பேர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

பாகிஸ்தான் எல்லையில் உள்ள சமான் பகுதியில் புகுந்து ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 50 ஆப்கன் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 50 பேர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்
Published on

இஸ்லாமாபாத்:

20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் அதிகாரிகள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உதவியுடன் எல்லை தாண்டி வந்து கணக்கெடுத்தனர்.

அதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதலும், துப்பாக்கி சண்டையும் நடந்தது. அதில் 8 பேர் பலியாகினர் அவர்களில் 7 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.

அதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் எல்லையில் உள்ள சமான் பகுதியில் புகுந்து ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

அதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

அதில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயம் அடைந்தனர். மேலும் ஆப்கானிஸ்தானின் 5 சோதனை சாவடிகள் முற்றிலும் அழிக்கப்பட்டது.

இத்தகவலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ஆப்கானிஸ்தான் ராணுவம் முற்றிலும் மறுத்துள்ளது. நடந்த துப்பாக்கி சண்டையில் இரு தரப்பினருக்கும் சேதம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com