நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன்
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன்
Published on

நாங்குநேரி:

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தி ஆகியோர் பின்தங்கினர். 

விக்கிரவாண்டியில் மதியம் ஒரு மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதேபோல் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். பிற்பகல் 2.45 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. ரெட்டியார்பட்டி நாராயணன், 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருப்பதன்மூலம், சட்டசபையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com