முதல்வரை நீக்கியதற்கு எதிர்ப்பு: சேலத்தில் டி.டி.வி. தினகரன் உருவ பொம்மை எரிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் உருவ பொம்மையை எரித்து சேலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வரை நீக்கியதற்கு எதிர்ப்பு: சேலத்தில் டி.டி.வி. தினகரன் உருவ பொம்மை எரிப்பு
Published on

சேலம்:

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கி அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்

இந்த நடவடிக்கையை கண்டித்து சேலம் 5 ரோடு மற்றும் அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

முதல்வர் பழனிச்சாமியை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரனுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

நிர்வாகிகள் நீக்கப்பட்டதை கண்டித்து, டிடிவி தினகரனின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com