ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதா வேட்பாளருக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு- எடப்பாடி பழனிச்சாமி

பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு அளிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதா வேட்பாளருக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு- எடப்பாடி பழனிச்சாமி
Published on

பா.ஜனதா தலைமையில் என்.டி.ஏ. அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு அளிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக அம்மா அணி சார்பில் இன்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை அலுவலத்திற்கு வந்தார்.

அங்கு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com