ஆதம்பாக்கத்தில் கடைக்குள் புகுந்து கலாட்டா ஒடிசா வாலிபர் கைது

ஆதம்பாக்கத்தில் கடைக்குள் புகுந்து கலாட்டா செய்து ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம்- மேடவாக்கம் சாலை பகுதியில் ஒரு வாலிபர் சில தினங்களாக கலாட்டா செய்து வந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு கடையில் புகுந்து அந்த வாலிபர் ரகளை செய்தார். அதை தடுக்க முயன்றவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில்,முருகன், மூர்த்தி ஆகியோர் காயம் அடைந்தனர். உதய மூர்த்தி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கலாட்டா செய்த வாலிபரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் குருநாயக் (30), ஒடிசாவை சேர்ந்தவர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com