ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்- நடிகர் பிரபு

ரஜினியும், கமலும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மதுரை விமான நிலையத்தில் நடிகர் பிரபு கூறினார்.
விமான நிலையத்தில் நடிகர் பிரபு பேட்டியளித்த போது எடுத்த படம்.
விமான நிலையத்தில் நடிகர் பிரபு பேட்டியளித்த போது எடுத்த படம்.
Published on

அவனியாபுரம்:

நடிகர் கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” தொடங்கி அரசியல் களத்தில் கால் பதித்து விட்டார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து அதற்கான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இவர்களது அரசியல் பிரவேசம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மதுரை விமான நிலையம் வந்த நடிகர் பிரபுவிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-

அண்ணன்கள் இருவரும் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு அவர்களுக்கு நல்லது செய்துள்ளது. அண்ணன்கள் 2 பேரும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com