திருப்பதி கோவிலுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுடன், ஆதார் அட்டையை கட்டாயமாக இணைத்து கோவில் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிலுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம்
Published on

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் வி.ஐ.பி. பக்தர்களும், சிபாரிசு கடிதங்கள் மூலம் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திலும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சிபாரிசு கடிதங்கள் மூலம் வரும் பக்தர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

சிபாரிசு கடிதங்களை பெற்று வரும் பக்தர்கள் தங்களின் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுடன், ஆதார் அட்டையை கட்டாயமாக இணைத்து கோவில் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com