சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முடிந்து 90 வயது முதியவர் ‘டிஸ்சார்ஜ்’

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முடிந்து 90 வயது முதியவர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை
Published on

சென்னை:

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த 90 வயது முதியவர் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பால், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள், அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என சந்தேகித்தனர். இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய் அவருக்கு இருந்ததால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.

அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். அவரை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் உள்ளிட்ட டாக்டர்கள் வாழ்த்தி வழியனுப்பிவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com