பிலிப்பைன்சில் டிராகன் படகு கவிழ்ந்து விபத்து- 7 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் டிராகன் படகுப்போட்டி பயிற்சியின் போது படகு கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி
விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி
Published on

கலிபோ:

டிராகன் படகுப்போட்டி சீன நாட்டின் பாரம்பரிய திருவிழாவாகும். இது சீனாவின் பாரம்பரியமாக இருந்தாலும் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள போராகே தீவில் டிராகன் படகுப்போட்டிகான பயிற்சியில் படகுப்போட்டி வீரர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது கடல் சீற்றத்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய அலைகள் காரணமாக டிராகன் படகு கவிழ்ந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர பாதுகாப்புப் படை தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இந்த போரோகே தீவின் அருகே உள்ள இலாய்லோ பகுதியில் 2 டிராகன் படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 நபர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com