குஜராத்தில் சோகம் - சிறுத்தைப்புலி தாக்கியதில் சிறுவன் பலி

குஜராத் மாநிலத்தில் சிறுத்தைப்புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுத்தைப்புலி
சிறுத்தைப்புலி
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது சம்பதால் கிராமம். அம்ரேலி மாவட்டத்தின் லிலியா காட்டுப்பகுதி அருகே இந்த 

கிராமம் அமைந்துள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் சிராக் கடாரா என்ற சிறுவன் அங்கிருந்த வயல்வெளி அருகே விளையாடிக்கொண்டிருந்தான். 

அப்போது திடீரென அப்பகுதிக்குள் வந்த சிறுத்தைப்புலி சிறுவனை கடித்து காட்டுக்குள் இழுத்துச் சென்றது. இதையடுத்து கிராம மக்கள் சிறுத்தைப்புலியை துரத்திச் சென்றனர். ஆனால் சிறுவனை பிணமாகவே மீட்க முடிந்தது. 

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தைப் புலிகளை பிடிக்க ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இது 

போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com