ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் பலி - கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்தது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஜெனீவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரத்து 896 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 43 லட்சத்து 15 ஆயிரத்து 876 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 134 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 60 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 114 பேர் பலியாகினர்.

இதனால் உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 1,31,477

பிரேசில் - 61,990

இங்கிலாந்து - 43,995

ஸ்பெயின் - 28,368

இத்தாலி - 34,818

மெக்சிகோ - 28,510

பிரான்ஸ் - 29,875

இந்தியா -  17,834  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com