3 நாட்களில் பொங்கலுக்காக 4½ லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் சேர்த்து 10-ந்தேதி முதல் இன்று காலை வரை இயக்கப்பட்ட 8,984 பஸ்களில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 292 பேர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
சொந்த ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறும் பயணிகள்.
சொந்த ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறும் பயணிகள்.
Published on

பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் 10-ந்தேதி முதல் நாளை வரை இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு பஸ் நிலையம், கே.கே. நகர், மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் சானிட்டோரியம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்திற்கு பயணிகள் செல்வதற்காக 310 மாநகர இணைப்பு பஸ்கள் 24மணி நேரமும் இயக்கப்படுகிறது.

10-ந்தேதி முதல் இன்று காலை வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் சேர்த்து இயக்கப்பட்ட 8,984 பஸ்களில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 292 பேர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி வழக்கமாக செல்லும் பஸ்கள் 450-ம், 82 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com