கல் குவாரி விபத்தில் 4 பேர் பலி: ஏல தாரர் கைது

வாடிப்பட்டி அருகே கல்குவாரி விபத்தில் 4 பேர் பலியானதால் ஏல தாரர் கைது செய்யப்பட்டார்.
கல் குவாரி விபத்தில் 4 பேர் பலி: ஏல தாரர் கைது
Published on

வாடிப்பட்டி:

வாடிப்பட்டி அருகே பூச்சம் பட்டியில் உள்ள அரசு கல்குவாரியை 5 ஆண்டுக்கு மதுரைஅவனியாபுரத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என் பவர் ஏலம் எடுத்தி நடத்தி வந்தார்.

அந்த கல்குவாரியில் 1-ந்தேதி மேதினத்தன்று மண்சரிந்து கீழே விழுந்து குலசேகரன்கோட்டை பரமசிவம்(வயது 45), பூச்சம்பட்டியை சேர்ந்த நாகராஜ்(54), கிருஷ்ணன்(45)ஆகிய 3 பேர் இறந்தனர்.

இதில் பூச்சம்பட்டியை சேர்ந்த சீனிவாசன்(48) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

சீனிவாசன் உடல் சொந்த ஊரான பூச்சம் பட்டிக்கு கொண்டு வந்தபோது அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குவாரி ஏலதாரரை கைது செய்யவேண்டும் என்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

தகவலறிந்த வாடிப்பட்டி தாசில்தார் பார்த்திபன், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன் குமார்ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில் சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் கல் குவாரி ஏலதாரர் ரமேஷ் குமாரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் பூச்சம்பட்டியை சேர்ந்த சிவா, சடையாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com