சென்னையில் தொடரும் சோகம் - மாஞ்சா நூல் அறுத்து 3 வயது சிறுவன் பலி

சென்னை கொருக்குபேட்டையில், காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஞ்சா நூல்
மாஞ்சா நூல்
Published on

சென்னை:

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவர் தனது 3 வயது மகன் அபினேஷ்வருடன் இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார்.

அப்போது காற்றாடி விட பயன்படுத்தும் மாஞ்சா நூல் குழந்தை அபினேஷ்வரின் கழுத்தை அறுத்துள்ளது. ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, மாஞ்சா நூலில் பட்டம் விட்ட நபர்களை தேடிவருகின்றனர். 

தந்தையின் கண் எதிரே சிறுவனின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com