பயணிகள்- விமானிகள் வராததால் சென்னையில் இருந்து 25 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிகள், விமானிகள், விமான பணிப்பெண்கள் குறித்த நேரத்துக்கு வராததால் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
பயணிகள்- விமானிகள் வராததால் சென்னையில் இருந்து 25 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன
Published on

சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், விமானிகள், விமான பணிப்பெண்கள் ஆகியோரால் குறித்த நேரத்துக்கு வந்து சேர முடியவில்லை.

இதனால் சென்னையில் இருந்து பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. சென்னையில் இருந்து துபாய், கொழும்பு, டெல்லி, மும்பை, அந்தமான், புனே, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 25 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

ஒவ்வொரு விமானமும் 30 நிமிடம் முதல் 1½ மணி நேரம் வரை தாமதமாகவே சென்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com