ரோகித் சர்மா
ரோகித் சர்மா

இரண்டாவது டி20 போட்டி: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்திய அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
Published on

லாடெர்ஹில்:

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், தவானும், ஆடினர். தவான் 23 ரன்னில்  அவுட் ஆனார். 

அடுத்து வந்த விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ரோகித் சர்மா அரை சதம் அடித்த சிறிது நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 67 ரன்களை எடுத்தார். அப்போது ஸ்கோர் 126 ரன்னாக இருந்தது. அதைத் தொடர்ந்து விராட் கோலியும் 23 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களம் வந்த குருணால் பாண்டியா 20 ரன் அடிக்க,  இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன் எடுத்தது. 

இதனையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்க உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com