சமூக வலைத்தளத்தில் சர்ச்சை பதிவு: 2 பேர் கைது

உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை பதிவு செய்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளத்தில் சர்ச்சை பதிவு: 2 பேர் கைது
Published on

சமூக வலைத்தளத்தில் ஆத்திரமூட்டும் வகையிலும், வதந்திகளை பரப்பியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சச்சின் சிங் அம்பேத்கர் மற்றும் ராகுல் கவுதம் ஆகிய இருவரும் மே 5-ந்தேதி சபிர்பூர் கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் போஸ்ட் செய்திருந்ததால் கைது செய்யப்பட்டனர் என போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்த் டூபே தெரிவித்துள்ளார்.

இருவரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட போஸ்ட்கள் வதந்திகளை பரப்பியதோடு, பொது மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com