காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெல்லட் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த 16 வயது சிறுவன் உயிரிழந்தான்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட டிரால் அருகேயுள்ள குல்பாக் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

இதை கண்ட தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

பிற்பகல் இரண்டு மணி நிலவரப்படி இருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்களில் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.  பெல்லெட் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கிகளால் வன்முறையாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் சுட்டனர்.

இதில் காயமடைந்த 16 வயது சிறுவன் பலியானதாக பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com