

மஸ்கட்:
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமன் நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் அறிவிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 140 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓமன் நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது.
ஓமனில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 132 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கொரோனா தொற்று காரணமாக 16 பேர் பலியானார்கள். இதையடுத்து, மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்தது.
தற்போது உடல்நலக்குறைவால் 150 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட மற்ற அனைவரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தவர்கள் சதவீதம் 93.5 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.