டெல்லி துக்ளகாபாத் குடிசைப்பகுதியில் மீண்டும் தீ விபத்து- 120 குடிசைகள் கருகின

டெல்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் கருகி சாம்பலாகின.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள்
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள்
Published on

புதுடெல்லி:

தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 1.30 மணியளவில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு குடிசையில் பறிய தீ மளமளவெனப் பரவி மற்ற குடிசைகளும் பற்றி எரிந்தன.

இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 22 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி 2 மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 120 குடிசைகள் முற்றிலும் கருகி சாம்பலாகின. தீ விபத்து உடனடியாக கண்டறியப்பட்டு அனைவரும் குடிசைகளை விட்டு வெளியேறியதால், யாரும் காயமடையவில்லை.

இப்பகுதியில் ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது தீ விபத்து இதுவாகும். கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் 250 குடிசைகள் கருகின.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com