தூத்துக்குடி மாவட்டத்தில் 11 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 11 சப்- இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இடமாற்றம்
இடமாற்றம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 11 சப்- இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ரவிகுமார் திருச்செந்தூர் கோவில் போலீஸ்நிலையத்துக்கும், தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஊர்க்காவல் பெருமாள் மணியாச்சி போலீஸ்நிலையத்துக்கும், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஹென்சன் பால்ராஜ் சங்கரலிங்கபுரம் போலீஸ்நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் தூத்துக்குடி தென்பாகம் ஞானராஜ் புதுக்கோட்டைக்கும், திருச்செந்தூர் கோவில் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய சங்கர் தட்டார்மடத்திற்கும், குலசேகரன்பட்டினம் சதீஷ் முத்தையாபுரத்துக்கும், ஓட்டப்பிடாரம் ரமேஷ்குமார் குலசேகரன்பட்டினத்திற்கும், கோவில்பட்டி கிழக்கு போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய ஸ்டீபன் தட்டப்பாறைக்கும், விளாத்திகுளம் தாமரை செல்வி கடம்பூருக்கும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மகேசுவரி நாறைக்கிணறு போலீஸ்நிலையத்துக்கும், மாவட்ட குற்றப்பிரிவு செல்லையா ஏரல் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com