

டெஹ்ரான்:
ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் இருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் தெற்கு பகுதியில் உள்ள ஷிராஸ் நகரில் நடைபெறும் கலாசார விழாவில் பங்கேற்பதற்காக 45 மாணவிகளை ஏற்றிவந்த பஸ் டராப் நகரின் அருகே விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 11 மாணவிகள் மற்றும் பஸ் டிரைவர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த 33 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.