

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷாண்டாங் மாகாணத்தின் வெய்ஹாய் நகரில் உள்ள சர்வதேச மழலையர் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் இன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ், சுரங்கப்பாதைக்குள் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அத்துடன் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் 5 தென்கொரிய குழந்தைகள், 6 சீனக் குழந்தைகள் என 11 மாணவர்களும், பஸ் டிரைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உள்ளூர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன. அதில், சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலில் இருந்து கரும்புகை வெளியேறுவது தெளிவாகத் தெரிந்தது.