நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின்
திமுக தலைவர் முக ஸ்டாலின்
Published on

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் கூடலூர் பகுதியில் நிலச்சரிவுகள், சாலைகள் துண்டிப்பு, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு  தி.மு.க. தலைவர்  மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,

‘‘கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் போதாது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் கன மழையால் வெள்ள அபாயம், மண் சரிவுகள் போன்ற இயற்கை அழிவுகள் ஏற்படாமல் இருக்க வல்லுநர் குழு அமைத்து உரிய புதிய  திட்டம் உருவாக்கப்பட  வேண்டும்.

நிவாரண உதவிகளை அனைத்துக்கட்சி குழு அமைத்து அக்குழுவினரின் முன்னிலையில் வழங்க வேண்டும். முகாம்களில் தங்கியுள்ள மக்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை அரசு தவிர்க்க வேண்டும்’’  என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com