

எந்த முடிக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்?
உங்களுக்கு முடி ரொம்ப ரஃப்பா, வறண்டு போயிருந்தா பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் நைட் முழுக்க வைக்கலாம். இது முடியை நல்லா சாஃப்ட் ஆக்கும்.
முடி பயங்கரமா கொட்டுனா, தேங்காய் எண்ணெயோட கொஞ்சமா விளக்கெண்ணெய் கலந்து தேய்ங்க. விளக்கெண்ணெய் புது முடி வளர ஹெல்ப் பண்ணும்.
கறிவேப்பிலை, மருதாணி, அல்லது நெல்லிக்காய் போட்டு காய்ச்சின வீட்டு எண்ணெயை யூஸ் பண்ணா முடி நல்லா கருகருன்னு வளரும்.
நைட் எண்ணெய் வைக்கும் போது செய்யக் கூடாத தவறுகள்..
எண்ணெய் வச்சதுக்கு அப்புறம் முடியை ரொம்ப டைட்டா ரப்பர் பேண்ட் போட்டோ அல்லது பின்னியோ கட்டக்கூடாது. இதனால முடிகால்கள் பலவீனமாகி முடி இன்னும் அதிகமா கொட்டும்.
எண்ணெய் வச்ச உடனே முடி சிக்கு எடுக்கிறேன்னு சீப்ப வச்சு சீவக்கூடாது. எண்ணெய் வச்சதும் முடிகால்கள் ரொம்ப சாஃப்டா இருக்கும், உடனே சீவுனா முடி கொத்து கொத்தா வரும்.
தலையில இருக்கிற எண்ணெய் பட்டு முகத்துல பருக்கள் வர வாய்ப்பிருக்கு. அதனால ஒரு பழைய துணியை தலையணை மேல போட்டுக்கோங்க. வாரத்துக்கு ஒருமுறை பில்லோ கவரை மாத்திடுங்க.
எவ்வளவு நேரம் வைக்கலாம்?
உங்களுக்கு சளி/சைனஸ் தொல்லை இல்லைனா 7 முதல் 8 மணி நேரம் இரவு முழுக்க அப்படியே விடலாம். ஒருவேளை சைனஸ் இருந்தா, நீங்க நைட் வைக்கவே வேண்டாம்.
காலையில குளிக்கப்போறதுக்கு 30 நிமிஷத்துக்கு முன்னாடி வச்சா மட்டுமே போதும். எந்த எண்ணெயாக இருந்தாலும் ரொம்ப நேரம் வைக்க வேண்டாம். எப்போவுமே நல்ல மசாஜ் பண்ணுங்க ரொம்ப நல்லது ஹேர்க்கு.
மறுநாள் காலையில என்ன பண்ணனும்?
காலையில எந்திரிச்சதும் வெதுவெதுப்பான தண்ணியில தலையை அலசுங்க. ரொம்ப சுடுதண்ணி ஊத்துனா முடி கொட்டும். கெமிக்கல் கம்மியா இருக்கிற மைல்டு ஷாம்பு அல்லது சீயக்காய் யூஸ் பண்ணி எண்ணெயை தேய்ச்சு குளிச்சிடுங்க.