உங்க உதடு கருப்பா இருக்கா? ரோஸ் கலரா மாத்த... இயற்கை வழி!

உதடுகள் வறண்டு போகும்போது எச்சிலால் அதனை ஈரப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 Dark Lips
Published on

தற்கால வாழ்க்கைமுறை மாற்றம், போதிய நீர்ச்சத்து இன்மை மற்றும் தரமற்ற அழகுசாதனப் பொருட்களின் பயன்பாடு காரணமாகப் பலருக்கும் உதடுகள் தங்களின் இயற்கையான பொலிவை இழந்து கருமையாக மாறும் சிக்கல் ஏற்படுகிறது. இந்தச் சிக்கலைக் களைந்து, உதடுகளை ஆரோக்கியமாகவும் இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்திலும் பராமரிப்பதற்கான சில எளிய வீட்டு வைத்திய முறைகள் உள்ளன.

 Dark Lips

உதடு ஸ்க்ரப்..

உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்குவது கருமையை குறைப்பதற்காக, ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன் சிறிதளவு தேன் கலந்து, உதடுகளின் மேல் மென்மையாக 2 நிமிடங்கள் தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.

 Dark Lips

உதட்டை சிவப்பாக்கும் 'பீட்ரூட்'..

பீட்ரூட்டில் இயற்கையாகவே உள்ள நிறமிகள் உதடுகளுக்குப் பொலிவைத் தரக்கூடியவை. பீட்ரூட்டின் சிறிய துண்டை எடுத்து உதடுகளில் நேரடியாகத் தேய்க்கலாம் அல்லது அதன் சாற்றை இரவு தூங்கும் போது தடவிக்கொண்டு தூங்கலாம். இது உதட்டின் கருமையைப் படிப்படியாகக் குறைக்கும்.

எலுமிச்சை மற்றும் கிளிசரின் பேஸ்ட்..

எலுமிச்சை சாற்றுடன் சம அளவு கிளிசரின் கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி உதட்டில் தடவி மசாஜ் செய்து வந்தால் காபி மற்றும் டீ குடிப்பதால் ஏற்படும் உதட்டின் கறைகள் மறையும். எலுமிச்சம்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் இயற்கையான வெளுப்பானாக செயல்படுகிறது.

 Dark Lips

பாதாம் எண்ணெய் மசாஜ்..

உதடுகள் வறண்டு போவதைத் தடுக்க இரவு படுக்கைக்குச் செல்லும் முன் சில துளிகள் பாதாம் எண்ணெய் அல்லது தூய்மையான நெய்யை உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது உதடுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.

கடைசியா ஒரு குட்டி அட்வைஸ்..

உதடுகள் வறளும் போது எச்சிலால் அதனை ஈரப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் உதடுகளை மேலும் கருமையாக்கும். எனவே, தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதே உதடுகளின் ஆரோக்கியத்திற்குச் சிறந்த வழியாகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com