search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அலங்காரம்
    X

    வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அலங்காரம்

    • உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அலங்காரத்திலும் கவனம்.
    • முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

    காலையில் எழுந்தது முதலே வீட்டு வேலைகளை வேகமாக முடிப்பதற்கு சுழலும் குடும்ப தலைவிகள் தங்கள் உடல் நலனிலும் அக்கறை காட்டுவது அவசியம். அப்போதுதான் சோர்வின்றி எந்த வேலையையும் மேற்கொள்ள முடியும். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் செல்லும் பெண்களாக இருந்தால் உடல் நலனுடன் மற்றொரு கவலையும் எட்டிப்பார்க்கும். தங்களால் நேர்த்தியாக அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அலங்காரத்திலும் கவனம் செலுத்துவதற்கு செய்ய வேண்டிய திட்டமிடல்கள் குறித்து பார்ப்போம்.

    இரவிலே தயாராகுங்கள்:

    காலையில் எழுந்ததுமே சமையல் வேலை, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்புவது, கணவருக்கும், குழந்தைகளுக்குமான மதிய உணவு தயார் செய்வது என கவனம் முழுவதும் வேலையின் மீதுதான் பதிந்திருக்கும். அதுவே மன நெருக்கடிக்கும் உள்ளாக்கும்.

    அதிலும் வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவியாக இருந்தால் அவசர கதியில் புறப்பட வேண்டியிருக்கும். அதனால் கவன சிதறல்கள் ஏற்படும். ஒருசில வேலைகளை செய்து முடிக்க முடியாமல் போகலாம். அவசரத்தில் தவறு நடக்கலாம்.

    அதனால் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். முந்தைய தினம் இரவே `நாளை என்ன சமையல் செய்ய வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், அதற்கு ஏற்ற அலங்கார பொருட்கள் என்னென்ன? என்பதை தேர்வு செய்து வைத்துவிட வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 15 நிமிடங்கள்தான் செலவாகும். மறுநாள் காலையில் வேலைகளை சுலபமாக முடித்துவிட்டு நீங்களும் பணிக்கு செல்ல தயாராகிவிடலாம். காலை நேர பரபரப்பையும், தேவையில்லாத டென்ஷனையும் தவிர்த்துவிடலாம். சருமமும் சோர்வுக்கு ஆளாகாது. அலங்காரத்திற்கும் போதுமான நேரம் செலவிட்டு விடலாம்.

    ஜடை பின்னல்:

    இரவில் தூங்க செல்லும்போது இறுக்கமாக ஜடை பின்னுவதை தவிர்க்க வேண்டும். கூந்தல் முடி தளர்வாக இருக்கும்படி பின்னுவதுதான் சரியானது. காலையில் எழுந்திருக்கும்போது சிக்குமுடி பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும். சிரமமின்றி எளிமையாக கூந்தல் அலங்காரம் செய்து கொள்வதற்கும் வழிவகை செய்யும். சிகை அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இல்லாவிட்டால் சிறிதளவு லோஷனை கூந்தலில் தடவலாம். அப்படி செய்தால் அலங்காரத்திற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருக்காது.

    ஐ லைனர்:

    தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்பவர்களின் கண்களைச் சுற்றி கருவளையங்கள் காணப்படும். ஐ லைனர் உபயோகித்து இதை அழித்து விடலாம். வீட்டில் அலங்காரம் செய்வதற்கு நேரம் இல்லையெனில் கைப்பையில் அலங்கார பொருட்களை வைத்துக்கொள்ளலாம். அலுவலகம் செல்லும் வழியிலோ, அலுவலகம் சென்ற பிறகோ எளிமையான ஒப்பனையை செய்துவிடலாம். அதற்கான சூழல் இல்லாதபட்சத்தில் பளிச்சிடும் நிறம் கொண்ட லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். அது அலங்காரம் இல்லாமலே உங்களை அழகாக காண்பிக்கும்.

    இரவு நேர குளியல்:

    இரவில் சாப்பிட்டுவிட்டு சமையல் அறை வேலைகளை எல்லாம் முடித்த பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இந்த குளியல் தூக்கம் கண்களை தவழ வைக்கும். மறுநாள் உற்சாகத்துடன் இயங்க உதவி புரியும்.

    Next Story
    ×